உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  புதுச்சேரிக்கு மேலும் 20 இ- பஸ்கள் வருகை: தேர்தல் முடிவுக்கு பின் இயக்க திட்டம்

 புதுச்சேரிக்கு மேலும் 20 இ- பஸ்கள் வருகை: தேர்தல் முடிவுக்கு பின் இயக்க திட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி பி.ஆர்.டி.சி., மத்திய அரசு நிதி உதவியுடன் மேலும் 20 புதிய எலக்ட்ரிக் பஸ்கள் வந்துள்ளன. இவை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கிராமப்புற வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன. புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பொதுப் போக்குவரத்து வசதியை மேம்படுத்தவும் இ-பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசால் புதுச்சேரிக்கு மொத்தம் 100 இ-பஸ்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக வந்த 25 பஸ்கள் தற்போது நகரின் பல்வேறு பகுதிகளில் இயக்கப்பட்டு வருகின்றன. குறைந்த ஒலி மற்றும் மாசு இல்லாத பயணம் காரணமாக, இந்த இ - பஸ்கள் பயணிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, பெரிய பஸ்கள் நுழைய முடியாத குறுகிய சாலைகள் கொண்ட நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் இவை எளிதாகச் சென்று வருவதால் பொதுமக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், இரண்டாம் கட்டமாக மேலும் 20 எலக்ட்ரிக் பஸ்கள் தற்போது புதுச்சேரிக்கு வந்து சேர்ந்துள்ளன. இந்த பஸ்கள் மேட்டுப்பாளையம் போக்குவரத்து பணிமனையில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், 'தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், ஓட்டு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் வெளியான பிறகு இந்தப் புதிய இ-பஸ்கள் முறைப்படி கிராமப்புற வழித்தடங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை