உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தட்சசீலா பல்கலையில் 2வது பட்டமளிப்பு விழா

தட்சசீலா பல்கலையில் 2வது பட்டமளிப்பு விழா

புதுச்சேரி: திண்டிவனம் ஓங்கூர் பகுதியில் அமைந்துள்ள தட்சசீலா பல்கலைக்கழகத்தில், 2வது பட்டமளிப்பு விழா நடந்தது. பல்கலைக்கழகப் பதிவாளர் செந்தில் வரவேற்றார். பல்கலைக்கழக வேந்தர் தனசேகரன் தலைமை தாங்கினார். இணை வேந்தர்கள் ராஜராஜன், டாக்டர் நிலா பிரியதர்ஷி, துணைவேந்தர் டாக்டர் விவேக் இந்தர் கோச்சார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தலைமை விருந்தினராக ஐ.நா., சபையின் மனிதக் குடியிருப்பு அமைப்பின் முன்னாள் நிர்வாக இயக்குநர் டத்தோ மைமூனா முகமது ஷரீப் கலந்து கொண்டு நிலையான வளர்ச்சி மற்றும் பெண்கள் முன்னேற்றம் குறித்து கருத்துரையாற்றினார். சிறப்பு விருந்தினராக இந்தியாவிற்கான மியான்மர் நாட்டுத் துாதர் மின் ஹ்த்வே பங்கேற்று, தனது கடற்படைப் பணி அனுபவங்களை பகிர்ந்து பேசினார். சாகித்ய அகாடமி விருது பெற்ற ராமகிருஷ்ணன், பத்ம பூஷண் விருது பெற்ற பின்னணிப் பாடகி சித்ரா ஆகியோரது சாதனைகளை பாராட்டி, பல்கலைக்கழகம் சார்பில், அவர்களுக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, 310 இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டதாரிகளுக்கும், இரண்டு முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன. சிறப்பான கல்வித் திறனை வெளிப்படுத்திய 19 மாணவர்களுக்கு தங்கப் பதக்கம், 186 மாணவர்களுக்கு முதல் வகுப்பு சிறப்பு தேர்ச்சிக்கான அங்கீகாரமும் வழங்கப்பட்டன. தேர்வுக் கட்டுப்பாட்டாளர் கோபாலகண்ணன் நன்றி கூறினார். கவுரவ இணைவேந்தர் ரங்கநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். பதிவாளர் செந்தில் நிறைவுயாற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ