மேலும் செய்திகள்
14 கிலோ கஞ்சா பறிமுதல்; 9 பேர் கைது
26-Feb-2026
வில்லியனுார்: வில்லியனுாரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். வில்லியனுார் எம்.ஜி.ஆர்., சிலை அருகே கஞ்சா விற்பதாகபோலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைதொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் புனிதராஜ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கிருந்த நபர்கள் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். சிறிய பாக்கெட்டுகளில் கஞ்சா வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். விசாரணையில், ரெட்டியார்பாளையம் தேவா நக ரை சேர்ந்த ஆறுமுகம் மகன் தருண், 20; ராமதாஸ் மகன் ஆனந்தராஜ், 21; தென்னல் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜன் மகன்பாலாஜி, 19; சுகுமார் மகன் லோகேஷ், 19; மணிகண்டன் மகன்திவாகர், 19, என, தெரியவந்தது. இவர்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் இளைஞர்கள் மற்றும் கல்லுாரி மாணவர்களிடம் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சா, ரூ. 4 ஆயிரம் ரொக்கம், மொபைல் போன் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, ஐந்து பேரையும் கைது செய்து, நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
26-Feb-2026