உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மரங்கள் விழுந்து 51 மின்மாற்றிகள் 1512 மின் கம்பங்கள் சேதம்

மரங்கள் விழுந்து 51 மின்மாற்றிகள் 1512 மின் கம்பங்கள் சேதம்

புதுச்சேரி: புதுச்சேரியில், பெஞ்சல் புயலால், 212 கி.மீ., மின் பாதைகள், 51 மின் மாற்றிகள், 1512 மின் கம்பங்கள் பாதிக்கப்பட்டன.புதுச்சேரி, கண்காணிப்புப் பொறியாளர் அலுவலக செய்திகுறிப்பு:கன மழை, பலத்த காற்றினால், புதுச்சேரி முழுவதும், மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு, கருதி அனைத்து மின்தடங்களிலும் மின் துண்டிப்பு செய்யப்பட்டது. காற்றின் வேகத்தினால், மரங்கள் மேல்நிலை மின்பாதைகளின் மேல் விழுந்தது.அதனால், 212 கி.மீ., துாரம் மின் பாதைகள், 51 மின் மாற்றிகள், 1,512 மின் கம்பங்கள் சேதமடைந்தன. வெங்கட்டா நகர், மரப்பாலம் துணை மின் நிலையங்களில் உள்ள கட்டுப்பாட்டு அறைகளில் மழை நீர் புகுந்தது. பாதுகாப்பு கருதி, மின் விநியோகம் சீரமைப்பதில் பிரச்னை ஏற்பட்டது. இரு, துணை மின்நிலையத்தில், ராட்சத மின் மோட்டார்கள் மூலம் நீரை வெளியேற்றிய பின் படிப்படியாக மின் விநியோகம் கொடுக்கப்பட்டது. நகரப்பகுதி மற்றும் அரியாங்குப்பம், உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் முழுமையாகவும், அகரம், கணுவாப்பேட்டை, ஆலங்குப்பம், வில்லியனுார், பாகூர் உள்ளிட்ட பகுதிகளில் 90 சதவீதம் மின் விநியோகம் சீரமைக்கப்பட்டது.கட்டுப்பாட்டு அறையில், வெள்ள நீர் புகுந்ததால், பாகூர் 230/110 கி.வோ துணை மின்நிலைய மின்சார உபகரணங்களில் பாதிப்பு ஏற்பட்டு, கடந்த 2ம் தேதி, இரவு முதல் பாகூர் 110/22 கி.வோ துணை மின் நிலையத்திற்கு மின்சாரம் தடைபட்டது. அதன் காரணமாக கிருமாம்பாக்கம் முதல் தவளக்குப்பம் வரையுள்ள மின்விநியோகம் வழங்குவதில், சிரமம் ஏற்பட்டது. கடந்த 29ம் தேதி, மழை துவங்குவதற்கு முன் முன்னெச்சரிக்கையாக அனைத்து மின் மாற்றிகளும் நிறுத்தி வைத்ததால், மின் விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இவ்வாறு செய்தியில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை