இ.சி.ஆரில் பழுதாகி நின்ற லாரியால் பரபரப்பு
புதுச்சேரி: கருவடிக்குப்பம் சிவாஜி சிலை சிக்னல் பகுதியில் சரக்கு ஏற்றி வந்த லாரி பழுதாகி, சாலையின் நடுவே நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னையில் இருந்து இ.சி.ஆர் வழியாக சரக்கு டராஸ் லாரி ஒன்று நேற்று புதுச்சேரிக்கு வந்து கொண்டிருந்தது. கருவடிக்குப்பம், சிவாஜி சிலை சிக்னல் பகுதியில் வந்தபோது திடீரென லாரியின் பின்புற டயர் வெடித்து, சாலையின் நடுவே நின்றது.மேலும், லாரியின் மீது இருந்த சரக்கின் அதிக கனம் காரணமாக வாகனம் ஒரு புறமாக சாய்ந்து, எந்தநேரமும் கவிழும் நிலை ஏற்பட்டது. இதனால், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், வடக்கு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.பின்னர், சிறிது நேரம் கழித்துலாரியின் பழுது சரி செய்யப்பட்டு மீண்டு புறப்பட்டு சென்றது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.