உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அச்சுறுத்தும் கட்டடம் அரியாங்குப்பத்தில் திக் திக்..

அச்சுறுத்தும் கட்டடம் அரியாங்குப்பத்தில் திக் திக்..

புதுச்சேரி: அரியாங்குப்பம் சாமிநாத நாயக்கர் வீதியில் நுாறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைய கல் வீடு ஒன்று உள்ளது. இந்த கல் வீட்டின் நடுவில் பெரிய அரச மரம் வளர்ந்து உள்ளது. அதன் காரணமாக வீட்டின் முன்பகுதி கட்டடம் சாலையில் விழுந்தது. அந்த நேரம் ரோட்டில் யாரும் செல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. இருப்பினும் மீதி உள்ள பாதி கட்டடம் எந்த நேரத்திலும் விழும் நிலையில் அச்சுறுத்தி வருகிறது.அந்த சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் பயத்துடன் கடந்து செல்கின்றனர். பழமையான கட்டடத்தின் கீழ் சிறுவர்களும் விளையாடுகின்றனர். நிழலுக்காக பலரும் ஒதுங்குகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், விபரீதம் ஏதும் ஏற்படும் முன் அக்கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி