மேலும் செய்திகள்
பொங்கலோ பொங்கல்; பள்ளிகளில் உற்சாக கொண்டாட்டம்
14-Jan-2026
புதுச்சேரி: வேளாண்துறை சார்பில் நடந்த போட்டியில் காலாப்பட்டு துவக்க பள்ளி மூலிகை தோட்டத்திற்கான பிரிவில் முதலிடம் பிடித்தது. வேளாண்துறை சார்பாக ஜவகர் சிறுவர் பூங்காவில் 36 ஆவது மலர் மற்றும் காய்கனி கண்காட்சி நடந்தது. இதில் இறுதி நாளான நேற்று முன்தினம் புதுச்சேரி வேளாண்துறை சார்பாக போட்டிகள் நடத்தப்பட்டு பல்வேறு பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பள்ளிகளுக்கான தோட்டக்கலை பிரிவில் காலாப்பட்டு, அரசு துவக்கப்பள்ளி, மூலிகை தோட்டத்திற்கான பிரிவில் முதல் பரிசையும், ஊட்டச்சத்து காய்கறிகள் தோட்ட பிரிவில் இரண்டாம் பரிசையும் பெற்றுள்ளது. பள்ளி கல்வி இணை இயக்குனர் சிவகாமி, துணை இயக்குனர் ராமச்சந்திரன், பள்ளித் துணை ஆய்வாளர் வட்டம் -1 அனிதா ஆகியோரை சந்தித்து பள்ளி தலைமை ஆசிரியர் ரமா, பள்ளி தோட்ட பொறுப்பாசிரியர் விஜயலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் பாத்திமா, சங்கர் தேவி, புஷ்பரேகா, வளர்மதி, அபிராமி ஆகியோர் பள்ளி மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் சார்பாக வாழ்த்துக்களை பெற்றனர்.
14-Jan-2026