உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கேபிள் புதைக்க தோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்து அபாயம்

கேபிள் புதைக்க தோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்து அபாயம்

திருபுவனை: மதகடிப்பட்டு - மடுகரை சாலையில் கேபிள் புதைக்க தோண்டப்பட்ட பள்ளங்களால் வாகன ஒட்டிகள் விபத்திற்குள்ளாகும் அபாயம் உள்ளது.மதகடிப்பட்டு - மடுகரை சாலை போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.இந்த சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கனோர் பயணம் செய்கின்றனர்.அங்குமதகடிப்பட்டு மேம்பாலம் நான்கு முனை சந்திப்பு துவங்கி, மடுகரை செல்லும் சாலையின் கிழக்கில், 500 மீ., துாரம் வரை, இயந்திரங்கள் மூலம், கேபிள் புதைக்க பல்வேறு இடங்களில், 10 அடி ஆழம் வரை பள்ளங்கள் தோண்டப்பட்டன.அதில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும், பணி முடிந்து பள்ளங்கள் மூடப்பட்டன. ஆனால் பெரும்பாலான இடங்களில் பள்ளங்கள் மூடப்படாமலேயே உள்ளன.இதனால் அந்த சாலையில் செல்லும் வானக ஓட்டிகள் பள்ளங்களில் தவறி விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அந்த பகுதியில், கேபிள் புதைக்கும் பணிகளை விரைந்து முடித்து, சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளங்களை சீரமைக்கவேண்டும். இது குறித்து சம்மந்தப்பட்டஅதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை