உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தாய்வழி சான்றிதழ் வழங்க குறிப்பாணை வெளியீடு அ.தி.மு.க., அன்பழகன் கண்டனம்

தாய்வழி சான்றிதழ் வழங்க குறிப்பாணை வெளியீடு அ.தி.மு.க., அன்பழகன் கண்டனம்

புதுச்சேரி : தாய் வழி சான்றிதழ் வழங்க குறிப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதற்கு அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: பெற்றோர்களின் இருப்பிடத்தை கணக்கிடும் போது தாயின் பிறப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை புதுச்சேரி அரசு அமல்படுத்த வேண்டும் என்று அ.தி.மு.க., பலகட்ட போராட்டங்கள் நடத்தியது. தற்போது தாய் வழி சான்றிதழ் வழங்க குறிப்பாணையாக பிறப்பிக்கப்பட்டுள்ளது.இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.மேல் முறையீட்டிற்கு அரசே செல்ல வழிவகுக்கும்.பாதிக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் நீதி வழங்கப்படும் விதத்தில் அரசுமாநிலம் முழுதும் பொருந்த கூடிய அரசாணையை பிறப்பித்திருக்க வேண்டும். அப்படி செய்யாமல் வடக்கு சப் கலெக்டர் பெயரில் குறிப்பாணை செய்யப்பட்டுள்ளது ஏற்கமுடியாது.அந்த குறிப்பாணை என்பது அவரின் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமே பொருந்தும்.மாநிலம் முழுதும் உள்ள பிரச்னையில்தலைமை செயலாளரோ அல்லது மாவட்ட கலெக்டர் இணைந்து அறிவிக்க வேண்டும்.ஆனால் மாவட்ட நிர்வாகம் வடக்குப்பகுதிக்கு மட்டும் அறிவித்திருப்பது கேளிக்கூத்தானது.இந்த அறிவிப்பிற்கு சட்டத்துறை அனுமதி அளித்துள்ளதா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !