உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மேக மூட்டத்துடன் நிறைவடைந்த அக்னி

மேக மூட்டத்துடன் நிறைவடைந்த அக்னி

புதுச்சேரி: மேக மூட்டத்துடன், கத்தரி வெயில் நேற்றுடன் நிறைவு பெற்றது.இந்த ஆண்டு கோடை வெயிலால், மக்கள் பகல் நேரங்களில் வெளியில் வரமுடியாமல் வீட்டிலேயே முடிங்கினர். சுற்றுலா இடங்களில் சுற்றுலா பயணிகள் குறைவாக காணப்பட்டனர். இந்நிலையில், கடந்த 4ம் தேதி, கத்தரி வெயில் துவங்கியது. அன்றைய தினத்தில், மழை பெய்தது. அக்னி நட்சத்திரம் துவங்குவதற்கு முன்பு அதிக பட்சமாக 102 டிகிரி வெப்பம் பதிவானது. அதன்பிறகு 100 டிகிரியை எட்டவில்லை. இந்நிலையில், வெயில் அதிகமில்லாமல், மேக மூட்டத்துடன் நேற்றுடன் அக்னி நட்சத்திரம் நிறைவு பெற்றது. அக்னி நட்சத்திரம் துவங்கி, நேற்றுடன் நிறைவடைந்த 25 நாட்களில், புதுச்சேரியில், விட்டு, விட்டு நல்ல மழை பெய்து, குளிர்ச்சியை ஏற்படுத்தியது.அதனால், அக்னி நட்சத்திர நாட்களில் வாட்டியெடுக்கும் வெயில் தெரியாமல் போனது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு, கோடை வெயில் குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை