உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஏ.ஜே. மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை

ஏ.ஜே. மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை

புதுச்சேரி: தவளகுப்பம் அடுத்த டி.என். பாளையம் ஏ.ஜே. மேல்நிலைப் பள்ளி (சி.பி.எஸ்.இ), பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில், ஏ.ஜே. மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். பள்ளி அளவில் ஓவியா முதலிடத்தையும், தஸ்வின் டேனி இரண்டாம் இடத்தையும், தமிழரசன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டும் வகையில் பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளியின் தாளாளர்கள் மரிய ஜீனா ஜான்சன், மேரி ஜான்சன் மற்றும் பள்ளி முதல்வர் கார்த்திகேயன் ஆகியோர் சாதனை படைத்த மாணவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கி, வாழ்த்து தெரிவித்தனர். வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பள்ளி நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி