உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  காமராஜ் நகர் காங்., வேட்பாளர் தேவதாசுக்கு தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆதரவு

 காமராஜ் நகர் காங்., வேட்பாளர் தேவதாசுக்கு தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆதரவு

புதுச்சேரி: காமராஜ் நகர் தொகுதி காங்., வேட்பாளர் தேவதாஸ் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தினமும் ஒவ்வொரு பகுதியிலும் வீடு வீடாக சென்று 'கை' சின்னத்திற்கு ஓட்டு சேகரித்து வருகிறார். அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=z2vvirew&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0காங்., வேட்பாளர் தேவதாஸ் நேற்று தனது தொகுதியில் உள்ள கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். தொடர்ந்து, காமராஜர் நகர் தொகுதி தி.மு.க., தொகுதி செயலாளர் சிவகுமார் தலைமையில் இண்டி கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பங்கேற்றார். தி.மு.க., நிர்வாகிகள், முக்கியஸ்தர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேவதாசிற்கு வரவேற்பு அளித்தனர். கூட்டத்தில் பேசிய தி.மு.க., நிர்வாகிகள், காமராஜ் நகர் தொகுதியில் காங்., வேட்பாளர் தேவதாஸ் வெற்றி பெற தங்களது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும், தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்து அவரை வெற்றி பெறச் செய்வோம் என்றும் ஒருமித்த கருத்துடன் தெரிவித்தனர். இண்டி கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, காமராஜ் தொகுதியில் காங்கிரஸ் மீண்டும் வெற்றிப்பெற உழைக்க வேண்டும் என, தேவதாஸ் கேட்டுக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை