உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  முன்னாள் மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி

 முன்னாள் மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி

புதுச்சேரி: லாஸ்பேட்டை புனித சூசையப்பர் குளுனி மேல்நிலை பள்ளியில் முன்னாள் மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. குளுனி பள்ளியின் மாகாண தலைவி லொரைன் பிண்டோ, இல்ல தலைவி செலின், பள்ளி முதல்வர் ரோசிலி, துணை முதல்வர் பான்சி, முன்னாள் முதல்வர் எமிலியானா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் இப்பள்ளியில் படித்த 50 ஆண்டுகள் கடந்து பொன் விழா மற்றும் வெள்ளி விழா காணும் முன்னாள் மாணவிகள் பங்கேற்று தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். வெள்ளி விழா காணும் மாணவிகளுள் ஒருவரான டாக்டர் சங்கர தேவி, இவர் மருத்துவத்துறையில் பணியாற்றுவது மட்டுமல்லாமல் ஆன்மிக உரையாற்றி வருகிறார். தொடர்ந்து முன்னாள் மாணவிகள் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் கலந்து கொண்டு பொன்விழா காணும் முன்னாள் மாணவிகளுக்கு பள்ளி சார்பில் பொன்னாடை அணிவித்து பரிசுகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ