அமலோற்பவம் முன்னாள் மாணவி யூ.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி
புதுச்சேரி: யூ.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற்ற அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவிக்கு கவுரவிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. வாணரப்பேட்டை அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவி டாக்டர் வைகவி யூ.பி.எஸ்.சி., சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 306வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். அவருக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. அமலோற்பவம் பள்ளியின் மூத்த முதல்வர் லுார்துசாமி யூ.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்ற வைகவிக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து அவருக்கு 8 கிராம் தங்க நாணயம் பரிசு வழங்கி வாழ்த்தினார். ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவில், முன்னாள் மாணவியும், யூ.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற்ற வைகவி பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறுகையில், 'மாணவர்கள் உறுதி, விடாமுயற்சி மற்றும் ஒழுக்கமான தயாரிப்பின் மூலம் இலக்கை எவ்வாறு அடையலாம் என்பது குறித்தும், இலக்கு நிர்ணயம், படிப்புமுறை மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் மனவலிமையின் முக்கியத்துவம் குறித்து ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்கினார். மாணவர்கள் பள்ளியின் நுாலகத்தை முழுமையாக பயண்படுத்த வேண்டும். தினமும் நாளிதழ் வாசிப்பு, எழுத்து பயிற்சி மேற்கொள்ள வேண்டும்' என்றார்.