உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / செயின் பறிப்பு வழக்கு குற்றவாளியை பிடிக்க போலீசார் ஆந்திரா விரைவு

செயின் பறிப்பு வழக்கு குற்றவாளியை பிடிக்க போலீசார் ஆந்திரா விரைவு

புதுச்சேரி: செயின் பறிப்பு மற்றும் பைக்குகள் திருட்டு வழக்கில் தலைமறைவு குற்றவாளியை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர்.புதுச்சேரி லட்சுமி நகர் - மகாத்மா காந்தி சந்திப்பில், டி.நகர், போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த ஆந்திராவை சேர்ந்த சந்தோஷ்குமார் (எ) பாபு, 36; போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், இவரது கூட்டாளியான ஆந்திராவை சேர்ந்த சையது பாஷாவுடன் சேர்ந்து, புதுச்சேரியில் பகுதியில், பெண்களிடம் செயின் பறிப்பு, பைக் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. அதையடுத்து, சந்தோஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, இரு பைக்குகள், மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து, அவரை காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.மேலும், கைது செய்யப்டவர் கொடுத்த தகவலில் பேரில் செயின் பறிப்பு மற்றும் திருட்டு வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான சையது பாஷாவை பிடிக்க புதுச்சேரி தனிப்படை போலீசார் ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ