உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நிவாரண நிதியில் பிடித்தம் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., கண்டிப்பு

நிவாரண நிதியில் பிடித்தம் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., கண்டிப்பு

புதுச்சேரி: மழை நிவாரணத்தை வங்கிகள் பிடித்தம் செய்து மக்களுக்கு துரோகம் செய்வதாக அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கார்டுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என தி.மு.க., சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அரசு ரூ.5 ஆயிரம் மட்டும் அறிவித்து, 10 நாள் கழித்து கொடுத்துள்ளது.அந்த பணம் பெண்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், பல வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வில்லை எனவும், பழைய கடன்களுக்காகவும் அந்த பணத்தை அரசு மற்றும் தனியார் வங்கிகள் பிடித்தம் செய்து வருகின்றன.இது புயல், மழையால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யும் துரோகமாகும். எனவே, உடனடியாக வங்கிகள், அவரவர்களுக்கு உரிய பணத்தை வழங்க வேண்டும். இல்லையேல் தி.மு.க., சார்பில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !