உள்ளூர் செய்திகள்

பால்குட அபிஷேகம்

திருக்கனுார்: காட்டேரிக்குப்பம் திரவுபதியம்மன் கோவிலில் தை மாதத்தையொட்டி பால்குட அபிஷேகம் வரும் 17ம் தேதி நடக்கிறது.காட்டேரிக்குப்பம் திரவுபதியம்மன் கோவிலில், தை மாத முதல் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு, 108 பால்குட ஊர்வலம் மற்றும் அபிஷேகம் வரும் 17ம் தேதி நடக்கிறது.அதையொட்டி, அன்று காலை 6:00 மணிக்கு ஓம்சக்தி அம்மன் கோவிலில் இருந்து பெண்கள் 108 பால் குடங்களை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, திரவுபதியம்மனுக்கு அபிஷேகம்செய்யப்படுகிறது. மாலை 3:00 மணிக்கு அம்மனுக்கு ஊரணி பொங்கல் நிகழ்ச்சியும், இரவு 8:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடக்கிறது.ஏற்பாடுகளை 24 மனை தெலுங்கு செட்டியார்கள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ