மாணவிகள் பலாத்கார வழக்கு மேலும் ஒருவரிடம் விசாரணை
புதுச்சேரி : புதுச்சேரியில் மாணவிகள் பாலியல் பலாத்கார வழக்கில் மேலும் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரியை சேர்ந்த 13 வயது மாணவிகள் 2 பேர் சமீபத்தில் மாயமாகினர். புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து மாணவிகளை தேடிய நிலையில், மாணவிகள் அன்றே வீடு திரும்பினர்.அவர்கள் சோர்வாக இருந்ததால், போலீசார் அவர்களை அழைத்து விசாரித்தனர். மாணவிகள் இருவரையும் குருசுக்குப்பம் மரவாடி தெருவை சேர்ந்த மீன் வியாபாரி புஷ்பராஜ், 25; வைத்திக்குப்பம் ஏ.சி., மெக்கானிக் மணிமாறன், 27; ஆகியோர் காதலித்ததும், அவர்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கி கொடுத்து, தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.மேலும், 10க்கும் மேற்பட்டவர்கள் அந்த 2 மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, மாணவிகள் விடுதியில் ஒப்படைக்கப்பட்டனர்.மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த புஷ்பராஜ், மணிமாறன் ஆகியோரை முத்தியால்பேட்டை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மாணவிகள் அளித்த தகவலின் பேரில், வழக்கில் தொடர்புடைய 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வரும் நிலையில், மேலும் ஒருவரை நேற்று பிடித்து விசாரித்து வருகின்றனர்.