உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை.,யில்  வெளி நபர்கள் சமூகவிரோத செயல் 

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை.,யில்  வெளி நபர்கள் சமூகவிரோத செயல் 

அ.தி.மு.க., குற்றச்சாட்டு புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைகழகத்திற்குள் வெளிநபர்கள் உள்ளே புகுந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக அ.தி.மு.க., குற்றம்சாட்டி உள்ளது.அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் கூறியதாவது;புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நிர்வாகத்தில் நடக்கும் கோஷ்டி பூசல்களால் சீர்கெட்டு வருகிறது.கல்லுாரிக்குள் போதிய பாதுகாப்பு இல்லாததால், வெளி நபர்கள் உள்ளே சென்று மது அருந்துதல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் அரங்கேறுகிறது.கடந்த 11ம் தேதி பல்கலை விடுதியில் தங்கி கல்வி பயிலும் வெளிமாநில மாணவி வெளி நபர்களால் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு,மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார்.மருத்துவமனை நிர்வாகம் எம்.எல்.சி., பதிவு செய்து, காவல் துறைக்கு தகவல் தெரிவித்து. சம்பவம் நடந்த 2 நாட்கள் கழித்து பல்கலைக்கழக நிர்வாகம் அளித்த புகாரின்பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.பல்கலைக் கழத்தின் அலட்சியம், பொறுப்பற்ற செயல் மற்றும்காலதாமத நடவடிக்கையால் தவறானசெய்திகள் வெளியாகி வருவது மாநிலத்திற்கு இழுக்கு. இந்த விவகாரம் தொடர்பாக பெண் ஐ.பி.எஸ்., விசாரணை அதிகாரியுடன், நீதிபதி தலைமையில் உயர்மட்ட விசாரணை அமைக்க முதல்வர் உத்தரவிட வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி