அப்போலோ புரோட்டான் நரம்பியல் மருத்துவர் புதுச்சேரி, திண்டிவனத்திற்கு நாளை வருகை
புதுச்சேரி: சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனை நரம்பியல் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் புதுச்சேரி, திண்டிவனத்தில் நாளை மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனை, நரம்பியல் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் கிருஷ்ணகுமார், புதுச்சேரி ராஜிவ்காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில் உள்ள, எண் 22, 14வது கிராஸ், அண்ணா நகர், அப்போலோ புரோட்டான் தகவல் மையத்தில், நாளை (23ம் தேதி) காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரை, மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.அதேபோல், அன்றைய தினம், திண்டிவனம் பெருமாள் கோவில் தெருவில், உள்ள அப்போலோ புரோட்டான் தகவல் மையத்தில், மதியம் 2:00 மணி முதல், 4:00 மணி வரை மருத்துவ ஆலோசனை வழங்குகிறார். முகாமில், தீராத தலைவலி, மயக்கம், தலையில் கட்டி, நரம்பு தளர்ச்சி, பக்கவாதம், வலிப்பு, கண்பார்வை மங்குதல், கழுத்தெலும்பு பிரச்னை, முதுகெலும்பு தொந்தரவு, தண்டுவட கட்டி பிரச்னைகள், கழுத்துவலி, முதுகுவலி, மறுத்து போதல் மற்றும் நரம்பியல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.முன்பதிவிற்கு, 99430 99523, 72000 34137 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளவும்.