அப்போலோ புரோட்டான் சிறப்பு மருத்துவர் புதுச்சேரி, திண்டிவனம் நாளை வருகை
புதுச்சேரி : சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனை சிறப்பு மருத்துவர், நாளை புதுச்சேரி மற்றும் திண்டிவனத்தில் ஆலோசனை வழங்குகிறார்.சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனை, நரம்பியல் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் கிருஷ்ணகுமார், புதுச்சேரி ராஜிவ்காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில் உள்ள, எண் 22, 14வது கிராஸ், அண்ணா நகர், அப்போலோ புரோட்டான் தகவல் மையத்தில் நாளை 19ம் தேதி, காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரை, மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.தொடர்ந்து, திண்டிவனம், எண் 58 பெருமாள் கோவில் தெரு, ஜெயின் கோவில் அருகே, அப்போலோ புரோட்டான் தகவல் மையத்தில் மதியம் 2:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.தீராத தலைவலி, மயக்கம், தலையில் கட்டி, நரம்பு தளர்ச்சி, பக்கவாதம், வலிப்பு, கண்பார்வை மங்குதல், கழுத்தெலும்பு பிரச்னை, முதுகெலும்பு தொந்தரவு, தண்டுவட கட்டி பிரச்னைகள், கழுத்துவலி, முதுகுவலி, மறுத்து போதல் மற்றும் நரம்பியல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் ஆலோசனை வழங்குகிறார்.முன்பதிவிற்கு, 9943099523, 7200034137 ஆகிய மொபைல் எண்ணிகளில் தொடர்பு கொள்ளவும்.