அப்போலோ சிறப்பு நிபுணர் 7ம் தேதி புதுச்சேரி வருகை
புதுச்சேரி: சென்னை அப்போலோ மருத்துவனையின் சிறப்பு நிபுணர் வரும் 7ம் தேதி புதுச்சேரி அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில் ஆலோசனை வழங்குகிறார். சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையின் சிறப்பு நிபுணர் முத்து குமரன், வரும் 7ம் தேதி சனிக்கிழமை, புதுச்சேரி, எல்லைப்பிள்ளை சாவடி, என்.டி.மஹால் எதிரில், 100 அடி ரோடு, எண்: 60, இயங்கி வரும் அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில், காலை 10:00 மணி முதல் 1:00 மணி வரை மருத்துவ ஆலோசனை வழங்குகிறார். அதில், குழந்தைகளுக்கு மூச்சு திணறல், குறைவான உணவு உட்கொள்ளல், அதிகப்படியாக வியர்த்தல், உடல் எடை அதிகரிக்காமல் இருத்தல், குழந்தையின் மேனி நீல நிறமாதல், நடுக்கம், நினைவு இழத்தல் போன்ற குழந்தைகளின் அனைத்து பிரச்னைகளுக்கும் தகுந்த சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை பெறலாம். டாக்டர் முத்து குமரனை சந்தித்து ஆலோசனை பெற, 0413- 4901083, 99446 63139, 82487 53248 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.