தவில், நாதஸ்வர பட்டய படிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு
அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூட முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக் கூடத்தில், இசைத்துறை, நாட்டியத்துறை, நுண்கலைத்துறை ஆகிய மூன்று துறைகள் உள்ளன. கடந்த 2003ம் ஆண்டு முதல் தவில், நாதஸ்வரம் ஆகிய பட்டயப் படிப்புகள் துவங்கப்பட்டு தொடர்ந்து நடந்து வருகின்றன. 2025 - 26ம் ஆண்டுக்கான தவில், நாதஸ்வர பட்டயப் படிப்புகள் சேர விரும்புகிறவர்கள், பல்கலைக்கூட அலுவலகத்தை ெதாடர்பு கொண்டு, விபரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பட்டயப்படிப்பு முடித்தவர்கள், தவில், நாதஸ்வர பட்டப்படிப்பில் சேரலாம். ஏற்கனவே 2024 - 25ம் கல்வியாண்டு முதல் இந்த படிப்பு, பட்டப்படிப்பாக நடத்தப்பட்டு வருகின்றன என, தெரிவித்துள்ளார்.