காளான் வளர்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
புதுச்சேரி: இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், காளான் வளர்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. புதுச்சேரி லெனின் வீதியில் இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் உள்ளது. இங்கு, காளான் வளர்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சியில் சேர 8ம் வகுப்பு படித்த, 18 முதல் 45 வயதுடைய புதுச்சேரியை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 30 நாட்கள் பயிற்சியில், உணவு வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க நாளை (26ம் தேதி) கடைசி நாளாகும். பயிற்சி 28ம் தேதி துவங்குகிறது. மேலும், 8870497520, 0413 2246500 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.