தலைமை நீதிபதி நியமனம்
புதுச்சேரி: புதுச்சேரிக்கு புதிய தலைமை நீதிபதியாக ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.புதுச்சேரி தலைமை நீதிபதி சந்திரசேகரன் காஞ்சிபுரத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். காஞ்சிபுரத்தில் பணிபுரிந்த நீதிபதி செம்மல் காரைக்காலுக்கு இடமாறுதல் பெற்றார்.காரைக்காலில் பணிபுரியும் முருகானந்தம், சென்னையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் பாதுகாப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். தர்மபுரியில் பணிபுரியும் நீதிபதி ஆனந்த் புதுச்சேரி தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.கடலுார் மாவட்ட கூடுதல் நீதிபதி விஜயகுமார் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். நாகை மாவட்ட நீதிபதி ஷோபனா தேவி கடலுார் மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் பிறப்பித்துள்ளார்.