நியமனம்
புதுச்சேரி : பா.ஜ., மாநில சிறப்பு அழைப்பள ராக சந்திர மோகன் நியமிக்கப்படுள்ளார். பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், சட்டசபை தேர்தலை முன்னிட்டு பல்வேறு பிரிவுகளுக்கு தலைவர்களை நியமித்து வருகிறார். அதன்படி, அரியாங்குப்பம் தொகுதி தொழிலதிபரும், சமூக சேவகருமான சந்திரமோகன் பா.ஜ., மாநில சிறப்பு அழைப்பளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாநில தலைவர் ராமலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.