உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  செயற்கை நுண்ணறிவு பயிற்சி

 செயற்கை நுண்ணறிவு பயிற்சி

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் மலவியா மிஷன் ஆசிரியர் பயிற்சி மையம் சார்பில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிக்கான தரவு பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு பயிற்சி நடந்தது. பல்கலைக்கழக இயக்குநர் தரணிக்கராசு பயிற்சியை துவக்கி வைத்தார். சென்னை அக்சென்ச்சர் மேலாண்மை இயக்குநர் உதயகுமார் ராமமூர்த்தி சிறப்புரையாற்றினார். பயிற்சி மையம் இயக்குநர் அருள், பேராசிரியர்கள் போத்துலா சுஜாதா, சிவசத்யா, சென்னை மகேந்திரா டெக் ஏ.ஐ., மாற்று நிபுணர் ஜவஹர் கோவிந்த்ராஜ், கணினி அறிவியல் துறைத் தலைவர் ஜெயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு தொழில்நுட்ப உலகில், நவீன கற்பித்தல் முறைகள் மற்றும் கல்வி ஆராய்ச்சியில் தரவு பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவை இணைப்பது அவசியம் குறித்து பேசினர். பல்கலைக்கழக பதிவாளர் ரஜநீஷ் பூதானி பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துரை வழங்கினார். உதவிப் பேராசிரியர் ஸ்ருஜனா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி