மேலும் செய்திகள்
மனைவியை தாக்கிய கணவன் கைது
24-Aug-2025
புதுச்சேரி : முன்விரோதம் காரணமாக கணவன், மனைவியை தாக்கிய ஆறு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். புதுச்சேரி காமாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காமாட்சி, 37; இவரது கணவர் கோபிநாத். இவர்கள் இருவரும் முத்தியால்பேட்டை வசந்தம் நகரில் உள்ள காமாட்சியின் தந்தை சிவனேசனை பார்க்க கடந்த 12ம் தேதி இரவு சென்றனர். அப்போது முன்விரோதம் காரணமாக, அவரது உறவினர்கள் முத்துலட்சுமி, அவரது மகன் பரத், மகள் ரீத்தா, காமாட்சியின் தாய் சரஸ்வதி, ராமலிங்கம் உள்ளிட்ட ஆறு பேர் சேர்ந்து காமாட்சியை வழிமறித்து திட்டி தாக்கினர். இதை தடுத்த கோபிநாத்தையும், தாக்கினர். பிறகு கோபிநாத் மீது வெடிகுண்டு வீசி கொலை செய்து விடுவதாக மிரட்டினர். காமாட்சி புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் ஆறு பேர் மீது வழக்குப்பு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
24-Aug-2025