மேலும் செய்திகள்
அரசுப் பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி
4 hour(s) ago
தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நடைபயணம்
4 hour(s) ago
7 பேரிடம் ரூ. 1.22 லட்சம் மோசடி
4 hour(s) ago
நெட்டப்பாக்கம்: பெங்களூர் ஆர்.ஆர்.சி., ஆராய்ச்சி நிறுவனம், இந்திய தேசிய உள்நாட்டு மீன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், மீன் விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி பனையடிக்குப்பம் மோகன்ராஜ் மீன் பண்ணையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு புதுச்சேரி மீனவர் நலத்துறை இணை இயக்குனர் கவியரசன் தலைமை தாங்கினார். திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வராசு வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பெங்களூரு ஆர்.ஆர்.சி., ஆராய்ச்சி நிறுவன முதுநிலை விஞ்ஞானி சதீஷா கலந்து கொண்டு மீன் குஞ்சுகள், மீன் தீவனம், மீன் வகைகள் குறித்தும், மீன்வளத்துறையில் உள்ள திட்டங்கள் குறித்தும், தீவன மேலாண்மை, தண்ணீர் பரமாரிப்பு முறைகள், நோய் மேலாண்மை குறித்து பேசினார். பாரதிதாசன் நன்னீர் மீன் விவசாயிகள் இயக்குனர் மோகன்ராஜ் கருத்துரை வழங்கினார். பயிற்சியில் 100க்கும் மேற்பட்ட மீன் விவசாயிகள் கலந்து கொண்டனர். பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு தீவனம் இலவசமாக வழங்கப்பட்டது.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago