உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விழிப்புணர்வு கருத்தரங்கு

விழிப்புணர்வு கருத்தரங்கு

வில்லியனுார்: மதராஸ் பெர்டிலைசர்ஸ் நிறுவனம் சார்பில், அரசு நிறுவனங்களிலும், தனியார் துறையிலும் ஊழல் தடுப்பு, வெளிப்படைத் தன்மை, நேர்மை மற்றும் பொறுப்புணர்வை ஊக்குவிப்பதற்கு ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி புதுச்சேரி செண்பகா ஓட்டலில் நடந்தது. புதுச்சேரி உணவு பிரிவு போலீஸ் எஸ்.பி., மாறன், ஊழல் எப்படி பொதுமக்களின் உரிமைகளை பாதிக்கிறது என்பதையும், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே ஊழலற்ற சமூகத்தை உருவாக்க முடியும் என, பேசினர். புதுச்சேரி வேளாண் மற்றும் உழவர் நலத்துறை துணை இயக்குனர் செழியன்பாபு, புதுச்சேரியில் விவசாயிகளுக்கு உரிய முறையில் உரங்களை வினியோகிப்பது மற்றும் விவசாயிகளுக்கு நியாயமான முறையிலான சேவை செய்வது குறித்து எடுத்துறைத்தார். கருத்தரங்கில் புதுச்சேரி பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் உரம் வினியோகஸ்தர்கள் உள்ளிட்ட100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ