உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அனுமதியின்றி பேனர்; உதவிப்பொறியாளர் புகார்

அனுமதியின்றி பேனர்; உதவிப்பொறியாளர் புகார்

அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் சாலையில் அனுமதியின்றி பேனர்கள் வைத்த நபர் மீது பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் போலீசில் புகார் அளித்தார்.பொதுப்பணித்துறை, உதவிப்பொறியாளர் ஜெயராஜ் அரியாங்குப்பம் புறவழிச் சாலையில், நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அப்போது அனுமதியின்றி அரியாங்குப்பம் சிக்னல் அருகே திருமண விழா நிகழ்ச்சிக்கு பேனர்கள் வைத்திருந்தனர். இதையடுத்து, பேனர்கள் வைத்த நபர் மீது, உதவிப்பொறியாளர் அரியாங்குப்பம் போலீசில் புகார் அளித்தார். சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை