உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தடையை மீறி பேனர்  போலீசார் வழக்கு

தடையை மீறி பேனர்  போலீசார் வழக்கு

புதுச்சேரி : புதுச்சேரியில் தடையை மீறி பேனர் வைத்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.புதுச்சேரியில் பேனர் கலாசாரம் தலை விரித்தாடுகிறது. அரசு அனுமதியின்றி சாலைகள், நடைபாதைகள், போக்குவரத்து சந்திப்புகள், திறந்தவெளிகளில் ஏராளமான பேனர்கள் வைக்கப்படுகின்றன.இந்நிலையில், பொதுப்பணித்துறை சாலைகள் மற்றும் கட்டடங்கள் மத்திய கோட்ட ஊழியர் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார். அப்போது முதலியார்பேட்டை, அம்பேத்கர் சாலையில் ஓரமாக பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.இது குறித்து அவர் முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சிவா என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை