உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடற்கரை துாய்மை படுத்தும் நிகழ்ச்சி

கடற்கரை துாய்மை படுத்தும் நிகழ்ச்சி

புதுச்சேரி: யோக்டோ பவுண்டேஷன் சார்பில் ‘நமது புதுவை – நமது பொறுப்பு’ தலைப்பில் ராக் பீச்சில் கடற்கரை துாய்மை பணி நடந்தது. புதுச்சேரியில் உள்ள பல்வேறு மருத்துவ மற்றும் செவிலியர் கல்லுாரிகளின் என்.சி.சி., மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்று ராக் பீச்சை துாய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கடற்கரையில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் முறையாக அகற்றப்பட்டன. நிகழ்ச்சியில், யோக்டோ பவுண்டேஷன் நிர்வாக நிறுவனர் சதீஷ் குமார், பேசுகையில், ‘நமது நகரத்தை துாய்மையாக வைத்திருப்பது நமது பொறுப்பு. மற்றவர்கள் வந்து சுத்தம் செய்ய வேண்டும் என்று காத்திருக்காமல், நாமே முன்வந்து துாய்மைப்படுத்த வேண்டும். இது ஒவ்வொரு குடிமகனின் சமூகப் பொறுப்பாகும். ‘நமது புதுவை – நமது பொறுப்பு’ என்பது ஒரு நாள் மட்டும் நடக்கும் துாய்மை பணியாக இல்லாமல், ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து சுற்றுச்சூழல் சார்ந்த செயல்பாட்டை முன்னெடுக்கும் திட்டமாகும். இந்த தொடர் முயற்சிகளில் கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தன்னார்வலர்களாக இணைந்து செயல்பட வேண்டும்’ என்றார். துாய்மை பணிக்கு ஆதரவு வழங்கிய பாண்டி தங்க மாளிகை, பிக் எப்.எம்., புதுச்சேரி சானிட்டரி இன்ஸ்பெக்டர், தினமலர் மற்றும் அனைத்து கல்லுாரிகளின் என்.எஸ்.எஸ்., அலுவலர்களுக்கு நினைவுப் பரிசு மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.   


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ