மேலும் செய்திகள்
முன்னாள் பிரதமர் நேரு நினைவு நாள்
28-May-2025
புதுச்சேரி: பாரதி கல்விக்குழுமம் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் மணமக்கள் டாக்டர் மோகன்குமார் - பிரியதர்ஷியை முதல்வர் ரங்கசாமி வாழ்த்தினார்.திருக்கனுார் சுப்ரமணியபாரதி மேல்நிலைப் பள்ளி, சோரப்பட்டு பாரதி ஆங்கில உயர்நிலைப் பள்ளிகளின் நிர்வாகி டாக்டர் சம்பத் - சுசிலா சம்பத் தம்பதியின் இளைய மகன் டாக்டர் மோகன்குமார், காரைக்கால் கோபால் மளிகை நிறுவனர் கோபால்சாமி - சித்ரா தம்பதியின் மகள் பிரியதர்ஷி திருமணம் காரைக்கால் அன்பு மஹாலில் 28ம் தேதி நடந்தது.புதுச்சேரி சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நடந்த திருமண வரவேற்பு விழாவில், முதல்வர் ரங்கசாமி பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினார். அமைச்சர்கள் மற்றும் எம்.பி.,க்கள் வைத்திலிங்கம், செல்வகணபதி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, துணை சபாநாயகர் ராஜவேலு, எதிர்க்கட்சித் தலைவர் சிவா, அரசு கொறடா ஆறுமுகம், முன்னாள் சபாநாயகர் சபாபதி, முன்னாள் துணை சபாநாயகர் செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அனந்தராமன், கோபிகா, ஜெயபால், பெத்தபெருமாள், ஓமலிங்கம் ஆகியோர் மணமக்களை வாழ்த்தினர்.லயன்ஸ் கிளப் நிர்வாகிகள், கல்வித்துறை, காவல்துறை அதிகாரிகள், டாக்டர்கள், தொழிலதிபர்கள், வணிகர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள்,ஊழியர்கள், மாணவர்கள் உட்பட பலரும் வாழ்த்தினர்.முன்னதாக, விழாவிற்குவந்திருந்தவர்களை மணமக்களின் பெற்றோர், பள்ளி நிர்வாக இயக்குநர் டாக்டர் ஹரிஷ்குமார் - நோவா ஆன் ஜேக்கப், சூரியநாராயணன் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர்.
28-May-2025