உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாரதிய ஜனன பரம்பரா உபன்யாச மாலா துவக்கம்

பாரதிய ஜனன பரம்பரா உபன்யாச மாலா துவக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி, பல்கலைக்கழகத்தில், பாரதிய ஜனன பரம்பரா உபன்யாச மாலா துவங்கப்பட்டுள்ளது.பல்கலைக்கழகத்தின் ஆனந்த ரங்கப்பிள்ளை நுாலகம் மற்றும் தமிழ்நாடு வித்யா பாரதி உச்ச சிக் ஷா சன்ஸ்தான் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து பாரதிய ஜனன பரம்பரா உபன்யாச மாலா (இந்திய அறிவு முறை விரிவுரைத் தொடர்) துவங்கப்பட்டுள்ளது.இந்தியாவின் பண்டைய அறிவுசார் பாரம்பரியத்தை மீட்டெடுத்து, சமகால கல்வி மற்றும் சமூக சூழல்களுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் புதுமையாக உயிர்ப்பிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவதே இதன் நோக்கமாகும்.விழாவில், பல்கலைக்கழக நுாலகர் விஜயகுமார் வரவேற்றார். பேராசிரியர்கள் கிளமென்ட் லுார்து, தரணிகரசு ஆகியோர் 'உள்நாட்டு அறிவை நவீன கல்வியில் ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவம் குறித்தும்,உபன்யாச மாலா, துறை வாரியான உரையாடல்களுக்கு மேடையாக அமையும் என்றனர்.டில்லி, இந்திய தத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் உறுப்பினர் சம்பத்குமார், இந்திய தத்துவ மரபுகளின் ஆழம், பன்முகத் தன்மை மற்றும் அவற்றை கல்விக்குழுமங்களில் கொண்டு வருவதற்கான அவசரத் தேவை குறித்தும், தத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்தும் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை