உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

புதுச்சேரி : புதுச்சேரி பா.ஜ., சார்பில் நகர, உழவர்கரை மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தலைமை அலுவலகத்தில் நடந்தது. நகர தலைவர் கிருஷ்ணராஜ், உழவர்கரை தலைவர் உலகநாதன், வில்லியனுார் தலைவர் அனிதா, அரியாங்குப்பம் தலைவர் சுகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் மாநிலத் தலைவர் ராமலிங்கம், மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, அமைச்சர்கள் நமச்சிவாயம், ஜான்குமார், எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், தீப்பாஞ்சான், செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அசோக் பாபு, வெங்கடேசன், இளங்கோ, மனோகர், மாநில பொதுச் செயலாளர்கள் மோகன் குமார், லட்சுமிநாராயணன், மாவட்ட பொறுப்பாளர்கள் ரத்தனவேல், ராமு, வெற்றிசெல்வம், ஆனந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை முன்னிட்டு பூத் கமிட்டியை வலுப்படுத்த, நிர்வாகிகள் களத்தில் பணியாற்ற வேண்டுமென, ஆலோசனை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி