பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி: டில்லியில் நடந்து வரும் உலக ஏஐ., மாநாட்டை நடத்தி இந்தியா தனது தொழில்நுட்ப முன்னேற்றத்தை உலகுக்கு வெளிப்படுத்தி கொண்டிருக்கும் நேரத்தில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தலைமையில் நடந் த போராட்டத்தில் இளைஞர் காங்., நிர்வாகிகள் அரை நிர்வாணமாக மாநாட்டு வளாகத்திற்குள் நுழைந்து நாட்டின் மரியாதையை குலைக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர். அரசியல் எதிர்ப்பு ஜனநாயக உரிமை என்றாலும், இந்தியாவின் சர்வதேச மரியாதையை பாதிக்கும் நடவடிக்கைகள் ஏற்க முடியாது என்பதை வலியுறுத்தி, புதுச்சேரி பா.ஜ., இளைஞர் அணி தலைவர் ஆடலரசன் தலைமையில், காங்., தலைமை அலுவலகம் எதிரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ராகுல் உருவ பொம்மையை எரித்து, எதிர்ப்பு கோஷங்களை நிர்வாகிகள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.