| ADDED : நவ 22, 2025 05:44 AM
புதுச்சேரி: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி (எஸ்.ஐ.ஆர்.) குறித்த பா.ஜ., மாநில நிர்வாகிகள் குழு கூட்டம் பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக பா.ஜ., தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக், தமிழக பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டு, 'புதுச்சேரி பா.ஜ., வாக்குச்சாவடி முகவர்கள் எஸ்.ஐ.ஆர். பணியை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும். தங்கள் தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் பூர்த்தி செய்துள்ள விண்ணப்பங்களை வாங்கி ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என, அறிவுறுத்தினர். கூட்டத்தில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.,க்கள் ராஜசேகரன், தீப்பாய்ந்தான், செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ., அசோக்பாபு மற்றும் தொகுதி ஓட்டுச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.