பா.ஜ., சார்பில் நமோ யுவா ரன் மாரத்தான் போட்டி
புதுச்சேரி: பா.ஜ., சார்பில் பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு நடந்த நமோ யுவா ரன் மாரத்தான் போட்டியை மாநில தலைவர் ராமலிங்கம் துவக்கி வைத்தார். பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுதும் 75 இடங்களில் நமோ யுவா ரன் மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. அதன் ஒருபகுதியாக புதுச்சேரிமாநில பா.ஜ., சார்பில் காந்தி சிலை அருகே நடந்த மாரத்தான் போட்டியை மாநிலத் தலைவர் ராமலிங்கம்கொடியசைத்து துவக்கி வைத்தார். ஆண்கள், பெண்கள் என 2 பிரிவுகளாக நடந்த போட்டியில், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். உடல் ஆரோக்கியம், போதை இல்லா இந்தியா, சமுதாய ஒற்றுமை, சுயசார்பு இந்தியா ஆகியவற்றை வலியுறுத்தி நடந்த போட்டியில், வெற்றி பெற்ற முதல் 10 பேருக்கு பரிசுகளும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இதில், எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், தீபாய்ந்தான், முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடேசன், மாநில இளைஞரணி தலைவர் வருண், பொதுச் செயலாளர் ஆடலரசன், தமிழரசன், மகேந்திரன், மாநில பொதுச் செயலாளர்கள் மோகன் குமார், லட்சுமிநாராயணன், மாநில துணைத் தலைவர்கள் ஜெயலட்சுமி, சரவணன், முத்தியால்பேட்டை செந்தில்குமரன், வெற்றி செல்வம், நாகேஸ்வரன் மற்றும் இளைஞரணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.