உள்ளூர் செய்திகள்

ரத்த தான முகாம்

புதுச்சேரி: சாரதா கங்காதரன் தன்னாட்சி கல்லுாரியில், தீவிர கல்வி, தகவல் மற்றும் தகவல் தொடர்பு மாதத்தை முன்னிட்டு செஞ்சுருள் சங்கம், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இந்திரா காந்தி அரசு மருத்துவமனை சார்பில் இலவச ரத்த தான முகாம் நடந்தது. முகாமை கல்லுாரி முதல்வர் பாபு துவக்கி வைத்தார். இந்திரா காந்தி மருத்துவமனையின் ரத்த வங்கி பிரிவு மருத்துவ அலுவலர் கார்த்திகேயன் மற்றும் மருத்துவக் குழுவினர் ரத்த தானம் பெற்றனர். முகாமில் 41 பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். ஏற்பாடுகளை கல்லுாரியின் செஞ்சுருள் சங்கம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ