புளூ பிளாசம் சர்வதேச மழலையர் பள்ளி ஆண்டு விழா
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி வி.நி.பி.நகர்., புளூ பிளாசம் சர்வதேச மழலையர் பள்ளி ஆண்டு விழா நடந்தது. விழாவிற்கு, பள்ளி தாளாளர் சரோஜ் பூரணி தலைமை தாங்கினார். எஸ்.எஸ்.எம்.எஸ்., அறக்கட்டளை செயலாளர் சரண் பிரகாஷ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக நற்பவி வித்யாலயா பள்ளி தாளாளர் காயத்திரிதேவி அதமலிங்கம், புதுச்சேரி சிறைத்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் கேடயம் வழங்கி, சிறப்புரையாற்றினர். விழாவில், மாணவர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். பள்ளி தாளாளர் சரோஜ் பூரணி நன்றி கூறினார்.