கனமழை காரணமாக படகு குழாம் வெறிச்
அரியாங்குப்பம் : கனமழை காரணமாக சுற்றுலா பயணிகளின்றி நோணாங்குப்பம் படகு குழாம் வெறிச்சோடியது. புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் பயணிகள் நோணாங்குப்பம் படகு குழாமில், படகு சவாரி செய்கின்றனர். வார விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில், வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், நேற்று புதுச்சேரியில் கன மழை பெய்தது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் வராததால், படகு குழாம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், நோணாங்குப்பம் சுண்ணாம்பாறில் தண்ணீர் அதிகமாக செல்வதால், படகுகள் ஆற்றில் அடித்து செல்லாமல் இருக்க, அவற்றை படகு குழாம் ஊழியர்கள் கயிறு போட்டு கட்டி,பாதுகாப்பான இடத்தில் நிறுத்தினர்.