உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் 

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் 

புதுச்சேரி: புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில் தேசிய சேவை திட்டம் சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடந்தது.'மார்பக புற்றுநோயை தோற்கடிக்க ஒன்றாக சேர்ந்தோம்' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கிற்கு, கல்லுாரி முதல்வர் வீரமோகன் வரவேற்றார்.விழுப்புரம் கதிர்வீச்சு புற்றுநோய் நிபுணர் தேவிஸ்ரீ கலந்து கொண்டு, மார்பக புற்றுநோய் குறித்த விவரங்கள், அதற்கான சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள் குறித்து விளக்கினார். ஓய்வு பெற்ற பேராசிரியர் ராமுடு பங்கேற்று வாழ்த்தி பேசினார்.கருத்தரங்கில், கல்லுாரி பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். கணினி அறிவியல் உதவி பேராசிரியர் ஆரோக்யா மேரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ