உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறுமியை திருமணம் செய்த கொத்தனார் போக்சோவில் கைது

சிறுமியை திருமணம் செய்த கொத்தனார் போக்சோவில் கைது

அரியாங்குப்பம்:சிறுமியை திருமணம் செய்த கொத்தனார் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.அரியாங்குப்பம் அடுத்த சின்ன இருசாம்பாளையத்தை சேர்ந்தவர் லட்சுமணன்,28; கொத்தனார். இவர், 16 வயது சிறுமியுடன் பழகி வந்தார். சிறுமியை கடந்த 7ம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், வீட்டில் இருந்த சிறுமியை, லட்சுமணன் திருப்பதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கிருந்து திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு அழைத்துச் சென்று, திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. அதன்பேரில் போலீசார், உறவினர் வீட்டில் தங்கியிருந்த லட்சுமணனை போக்சோ சட்டத்தில் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுமியை மீட்டு புதுச்சேரியில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை