உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஆச்சார்யா பால சிக் ஷா மந்திர் பள்ளிக்கு பிரிட்டிஷ் கவுன்சிலிங் ரைட்ஸ் அங்கீகாரம்

 ஆச்சார்யா பால சிக் ஷா மந்திர் பள்ளிக்கு பிரிட்டிஷ் கவுன்சிலிங் ரைட்ஸ் அங்கீகாரம்

புதுச்சேரி: புதுச்சேரி தேங்காய்திட்டு பால சிக் ஷா மந்திர் பள்ளிக்கு சர்வதேச பள்ளிக்கான அங்கீகாரம் விருது (RIDS) பிரிட்டிஷ் கவுன்சில் நிறுவனம் வழங்கியுள்ளது. சர்வதேச பரிமாணங்களை பாடத்திட்டத்தில் சிறப்பாக ஒருங்கிணைத்து புதுமையான மற்றும் செயல்முறை கற்றல் செயல்பாடுகள் மூலம் மாணவர்களுக்கு உலகளாவிய கற்றல் அனுபவத்தை வழங்கியதற்காக இந்த பெருமைக்குரிய அங்கீகாரம் பள்ளிக்கு கிடைத்துள்ளது. மாணவர்கள் பழங்கள், தேசிய சின்னங்கள், நதிகளின் வாழ்க்கை, சத்துணவு தட்டு, பறவைகளின் வாழ்விடம், நாணயங்கள் மற்றும் பணம் முறைகள், பாரம்பரிய நினைவுச் சின்னங்களில் காணப்படும் வடிவியல் போன்ற உலகளாவிய தலைப்புகளை ஆராய்ந்து ஒப்பீட்டு முறையில் கற்றனர். இந்த ஆய்வுகளில் இந்தியா, கனடா, தென் ஆப்பிரிக்கா, சீனா, பிரான்ஸ், ஜப்பான், ஐக்கிய மாகாணங்கள், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இத்தாலி, கென்யா, போலாந்து, நேபாளம், ஐக்கிய ராஜ்யம், ஆப்கானிஸ்தான், தென்கொரியா மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆச்சார்யா கல்வி குழுமத்தின் தலைவர் அரவிந்தன், பள்ளி முதல்வர் கவிதா அவர்களின் சிறந்த வழிகாட்டுதலை பாராட்டி இவ்விருதினை, ரைட்ஸ் நிறுவன ஒருங்கிணைப்பாளர் லலிதா வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !