பி.எஸ்.என்.எல்., சிறப்பு மேளா புதுச்சேரியில் இன்று துவக்கம்
புதுச்சேரி : புதுச்சேரியில் பி.எஸ்.என்.எல்., மூன்று நாள் சிறப்பு மேளா விற்பனை முகாம் இன்று துவங்குகிறது.புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., முதன்மை மேலாளர் செய்திக்குறிப்பு:புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் இன்று துவங்கி வரும் 31ம் தேதி வரை மூன்று நாட்கள், ரங்கபிள்ளை வீதி பொது தொலைபேசி நிலைய அலுவலகம் எதிரில் நடக்கிறது.இதில், ரூ.128 மதிப்புள்ள பி.எஸ்.என்.எல். 4ஜி சிம் ரூ. 50க்கு வழங்கப்படுகிறது. இந்த சிம் கார்டில் 28 நாட்களுக்கு ஒரு ஜிபி டேட்டா, மற்றும் அளவில்லா அழைப்புகள் இலவசம்.இந்த சிறப்பு முகாமில் புதிய சிம் கார்டு வாங்குபவர்களுக்கு மற்றும் பிற நெட்வொர்க்கில் இருந்து எம்.என்.பி., மூலம் பி.எஸ்.என்.எல்.க்கு வருபவர்களுக்கு 4ஜி சிம் இலவசமாக வழங்கப்படும். மேலும் தற்போதுள்ள 2ஜி, 3ஜி, சிம் வைத்திருப்பவர்கள் அவற்றை 4ஜி சிம்மாக இலவசமாக மேம்படுத்திகொள்ளலாம்.புதுச்சேரி மொபைல் வாடிக்கையாளர்களுக்காக இன்ட்ராநெட் டிவி (BITV)அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இச்சேவையைப் பெற ஆன்ட்ராய்டு மொபைல் பயன்பாட்டாளர்கள் தங்களது மொபைல் போனில் கூகுள் ப்ளேஸ்டோர் சென்று ஓடிடி பிளே ஆப் யை நிறுவி பயன்படுத்த வேண்டும். இதில் சன் நெக்ஸ்ட், பிளே பிளிக்ஸ் உள்ளிட்ட 6 ஓடிடி களை இலவசமாக வழங்குகிறது.பாரத் பைபர் சேவை ரூ. 499 திட்டம், புதிய வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கு,ரூ. 399க்கு வழங்கப்படுகிறது. முதல் மாதக்கட்டணம் இலவசம். புதிய வாடிக்கையாளர்களுக்கு 60 எம்.பி.பி.எஸ். பதிவிறக்க வேகத்துடன் கூடிய காலாண்டு பாரத் பைபர் ரூ. 999 க்கும், அரையாண்டு பாரத் பைபர் ரூ. 1999 க்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பாரத் பைபர் வாடிக்கையாளர்களுக்காக இலவச ஐ.எப்.டி.வி., மற்றும் பி.எஸ்.என்.எல்., தேசிய வைபை ரோமிங் சேவை வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு அருகிலுள்ள பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொள்ளவும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.