உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறையில் மொபைல் பறிமுதல் மூன்று கைதிகள் மீது வழக்கு

சிறையில் மொபைல் பறிமுதல் மூன்று கைதிகள் மீது வழக்கு

புதுச்சேரி: காலாப்பட்டு சிறையில் மொபைல்போன் பதுக்கியதாக மூன்று கைதிகள் மீது வழக்குப் பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். காலாப்பட்டு மத்திய சிறையில் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையிலான சிறை வார்டர்கள் கடந்த 27ம் சிறைச்சாலையில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது விசாரணை கைதிகள் வளாகம், உள் சுவருக்கும், வெளி காம்பவுண்ட் சுவருக்கும் இடைப்பட்ட பகுதியல் ஒரு மொபைல்போன் மற்றும் நான்கு சார்ஜர்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் மொபைல் போன் மற்றும் சார்ஜர்களை பதுக்கியது, விசாரணை கைதிகள் கார்த்திகேயன், சூர்யா, அப்துல் நசீர் ஆகியோர் என தெரியவந்தது. இது குறித்து சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் கொடுத்த புகாரின் பேரில், கைதிகள் கார்த்திகேயன் உட்பட மூவர் மீது காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை