தேர்தல் நடத்தை விதியை மீறிய தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு
காரைக்கால்: தேர்தல் நடத்தை விதியை மீறி பேனர் வைத்த தி.மு.க., பிரமுகர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். காரைக்கால், திருநள்ளாறு பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். திருநள்ளாறு வடக்கு வீதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த காதணி விழாவிற்கு தி.மு.க., கட்சி மூத்த தலைவர்கள் புகைப்படங்கள் மற்றும் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களின் படங்களுடன் இரண்டு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. போலீசார் விசாரணையில் பொது இடத்தில் தேர்தல் நன்னடத்தை விதியை மீறி பேனர் வைத்துள்ள திருநள்ளாறு வடக்கு தெருவை சேர்ந்த தி.மு.க., பிரமுகர் பாலச்சந்தர், 47, என்பவர் மீது திருநள்ளாறு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.