உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு

பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு

புதுச்சேரி: பெண் மீது தாக்குதல் நடந்தியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். தமிழகம், காட்ராம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரதாப் மனைவி ராதிகா, 29; இவர் புதுச்சேரி ராஜிவ் சதுக்கம் அருகில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். இந்நிலையில் கடந்த 7ம் தேதி மாலை காட்ராம்பாக்த்தை சேர்ந்த மதியரசன் என்பவர் ராதிகா வேலை செய்யும் கம்பெனி அருகில் வந்து, அவரிடம் பேசுமாறு தகராறு செய்தார். அதற்கு அவர் மறுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மதியரசன் ராதிகாவை, தகாத வார்த்தையால் திட்டி, கையில் வைத்திருந்த மொபைல் போனை வீசி தாக்கினார். இதில் காயமடைந்த ராதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின்பேரில் டி.நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை