மேலும் செய்திகள்
சிட்டி கிரைம் செய்திகள்
31-May-2025
காரைக்கால்: காரைக்காலில் பெட்டிக்கடையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்த பெண் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். காரைக்கால் திருப்பட்டினம் பகுதியில் பள்ளி மற்றும் பொது இடத்தில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் நேற்று முன்தினம் போலீசார் திருப்பட்டினம், பட்டினச்சேரி சாலையில் உள்ள ஒரு பெட்டி கடையில் சோதனை செய்தனர். அங்கு குட்கா பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. விசாரணையில் பட்டினச்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த சிவராணி, 42; என தெரியவந்தது. திருப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து அவரிடமிருந்த 3,500 ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
31-May-2025